
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர் அச்சுறுத்தல் தற்போது ஒரு மிகப்பெரிய உட்கட்டமைப்புப் போராக உருவெடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கைக்கு, ஈரான் அதே பாணியில் நேரடிப் பதிலடி கொடுத்துள்ளது.
ஈரான் வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் இஸ்மாயில் பாகாய் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,
செய்தி அறிவிப்புகள்
ஈரானின் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலாக அமெரிக்காவுக்குச் சொந்தமான அல்லது அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படும் அதேபோன்ற உட்கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும்.
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் எந்தவொரு சொத்துக்களும் ஈரானியப் படைகளின் இலக்குகளாக மாறும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது 'ஆக்ஸியோஸ்' (Axios) நேர்காணல் மற்றும் 'ட்ரூத் சோஷியல்' பதிவுகளில் மிகத் தீவிரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
"ஈரான் உடன்பாட்டிற்கு வராவிட்டால், அங்குள்ள அனைத்தையும் நான் தகர்த்துவிடுவேன் என அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
வரும் செவ்வாய்க்கிழமைக்குள் ஈரானின் அனைத்து எரிசக்தி மற்றும் சிவில் உட்கட்டமைப்புகளையும் அமெரிக்கா முடக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானின் மிகப்பெரிய பாலம் ஏற்கனவே தகர்க்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், "ஈரான் ஒரு சிறந்த நாடாக மாறுவதற்கு இன்னும் வாய்ப்பு இருக்கும்போதே உடன்பாட்டிற்கு வருவது நல்லது; இல்லையேல் அழிவைத் தவிர வேறு எதுவும் மிஞ்சாது" எனக் கூறியுள்ளார்.
ஒருபுறம் கடும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும், மறுபுறம் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு "நல்ல வாய்ப்பு" இருப்பதாக அவர் நம்புவது, போர் தவிர்க்கப்படுவதற்கான ஒரு சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.



0 Comments