
ஈரான் ஆன்மீகத் தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி (86) படுகொலை செய்யப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகியும் அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல் உள்ளது.
ஈரானிய அதிகாரிகள் ஒரு பிரமாண்டமான அரசு மரியாதையுடன் கமேனியின் இறுதிச் சடங்கை நடத்த விரும்புகின்றனர். ஆனால் அத்தகைய கூட்டத்தில் மீண்டும் அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி இறுதிச் சடங்கு நடத்துவது தள்ளிப் போடப்படுவதாகக் கூறப்படுகிறது. அதுவரை அவரின் உடல் இரகசிய இடத்தில் பதப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் போரின் முதல் நாளிலேயே அந்நாட்டின் ஆன்மீகத் தலைவரான அயதுல்லா அலி கமேனி உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



0 Comments