
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட இருவார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, தேவைப்படும் நேரங்களில் எல்லாம் ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இப் போர் நிறுத்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று இஸ்ரேல் முன்னதாக கூறியிருந்தபோதிலும் லெபனான் மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் ஒப்பந்தத்தின் கடுமையான மீறலுக்கு சமம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
எங்கள் செய்தி தெளிவாக உள்ளது. இஸ்ரேலியப் பொதுமக்களுக்கு எதிராகச் செயல்படும் எவரும் குறி வைக்கப்படுவார்கள் என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
வடக்குப் பகுதி மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை நாங்கள் மீட்டெடுக்கும் வரை தேவைப்படும் நேரங்களில் எல்லாம் ஹிஸ்புல்லா மீது நாங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என மேலும் தெரிவித்துள்ளார்.



0 Comments