Trending

6/recent/ticker-posts

Live Radio

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை ஒரு போர் நடவடிக்கை - ஈரான்...!



அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையை ஈரான் ஒரு தொடர்ச்சியான பகைமை நடவடிக்கையாகவே கருதுவதாக மத்திய கிழக்கு மூலோபாய ஆய்வு மையத்தின் மூத்த ஆய்வாளர் அப்பாஸ் அஸ்லானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவினால் ஒருதலைப்பட்சமாக அறிவிக்கப்பட்ட போர்நிறுத்த நீடிப்பு குறித்து ஈரான் இதுவரை எந்த உத்தியோகபூர்வ பதிலும் அளிக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை அமுலில் இருக்கும் வரை, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரணையை ஈரான் மீண்டும் திறக்காது என்பது தெளிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

தேவைப்பட்டால், பலத்தைப் பயன்படுத்தி இந்த கடற்படை முற்றுகையை உடைக்க ஈரான் முயற்சிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட கப்பலுக்கு பதிலடியாக ஈரான் சில நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் எனவும், இது பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் சூழலை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இராணுவ அச்சுறுத்தல்கள் மற்றும் கடற்படை முற்றுகை போன்ற நெருக்கடிகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஈரான் தயக்கம் காட்டுகிறது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் அமைதிப் பேச்சுவார்த்தை செயல்முறையை மேலும் சிக்கலாக்கியுள்ளன" என அஸ்லானி தனது ஆய்வில் மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments