Trending

6/recent/ticker-posts

Live Radio

இலங்கை – இத்தாலி இடையே புதிய ஒப்பந்தம்...!



இத்தாலியில் வாழும் இலங்கை மக்கள் எதிர்நோக்கியிருந்த சாரதி அனுமதிப்பத்திரப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிக்கும் ஒப்பந்தம் (Mutual Recognition of Driving Licences) இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு என்பன இணைந்து முன்னெடுத்த நீண்டகால இராஜதந்திர முயற்சியின் பலனாக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப நடவடிக்கைகளும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், இத்தாலியில் 6 ஆண்டுகள் வதிவிட உரிமையைக் கொண்டுள்ள இலங்கையர்கள், எழுத்து மூலமான அல்லது செய்முறைப் பரீட்சைகளுக்குத் தோற்ற வேண்டிய அவசியமின்றி தமது தேசிய சாரதி அனுமதிப்பத்திரத்தை இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரமாக மாற்றிக்கொள்ளத் தகுதி பெறுகின்றனர்.

இத்தாலியில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் பெருமளவிலான இலங்கை சமூகம் இந்த வசதியினைப் பெரிதும் பாராட்டியுள்ளதுடன், இது அவர்களின் வேலைவாய்ப்பு வசதிகளை மேம்படுத்தவும், இத்தாலியில் ஒரு பயனுள்ள வெளிநாட்டுச் சமூகமாகத் தமது பங்களிப்பை வழங்கவும் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.

Post a Comment

0 Comments