Trending

6/recent/ticker-posts

Live Radio

Update: ஹட்டன் சிங்கிமலை காப்பகத்தில் வழிதவறிய நெதர்லாந்து மாணவி மீட்பு...!



ஹட்டன், சிங்கிமலை இயற்கை காப்பகத்தின் மலை உச்சியில் வழிதவறிச் சென்ற 20 வயதுடைய நெதர்லாந்து நாட்டு யுவதி, ஹட்டன் பொலிஸாரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக மாணவியான லூனா டூகட் (Luna Tuugat), ருஹுணு பல்கலைக்கழகத்தின் இணைந்த வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் கல்வி பயின்று வருகிறார்.

ஏப்ரல் 6 ஆம் திகதி ஆராய்ச்சி நடவடிக்கையொன்றுக்காக நண்பர்களுடன் இணைந்து சிங்கிமலை உச்சிக்குச் சென்ற இவர், மலையை பார்வையிடச் சென்றபோது காப்பகத்தினுள் வழிதவறியுள்ளார்.

இது குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஹட்டன் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர். நீண்ட தேடுதலின் பின்னர், மலை உச்சியில் உள்ள பாறை ஒன்றில் அமர்ந்திருந்த அவரை மீட்ட பொலிஸார், பாதுகாப்பாக ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Post a Comment

0 Comments