Trending

6/recent/ticker-posts

Live Radio

ஒரே நாளில் 1 மில்லியன் ஃபாலோவர்ஸ் எட்டியுள்ள தமிழக முதலமைச்சரின் இன்ஸ்டாகிராம்..!



தமிழக முதலமைச்சர் சி.ஜே.ஜோசப் விஜய்யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (CMO Tamil Nadu) ஒரே நாளில் 1 மில்லியன் (10 லட்சம்) ஃபாலோவர்ஸ் என்ற மைல்கல்லை எட்டிப் பிடித்துள்ளது.

நேற்று வரை சுமார் 4 லட்சம் பேரால் மட்டுமே பின்தொடரப்பட்டு வந்த இந்த பக்கம், கடந்த 24 மணி நேரத்திற்குள் இந்த ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது.சாதாரண நாட்களில் மாதக்கணக்கில் ஏற்படும் இந்த வளர்ச்சி, முதலமைச்சர் பொறுப்பேற்ற மிகக்குறுகிய காலத்தில் நடந்திருப்பது அரசியல் நோக்கர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வியத்தகு வளர்ச்சி குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்று (மே 11, 2026) வெளியாகியுள்ளன. முதலமைச்சரின் ஒவ்வொரு நகர்வையும், அரசின் அறிவிப்புகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள மக்கள் காட்டும் ஆர்வம் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் புதிய ஆட்சியின் கீழ், டிஜிட்டல் தகவல் தொடர்பிலும் தமிழக அரசு ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருப்பதாகவே சமூக வலைதள வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Post a Comment

0 Comments