
இலங்கையில் வாகனங்கள் வாங்குவதற்காக வழங்கப்படும் கடன் வசதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களால், வாகன இறக்குமதி மற்றும் விற்பனையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.
அத்துடன், தற்போதைய சூழ்நிலையில் வாகனங்களின் விலை உயரும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், அபாயங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதிகளின் (லீசிங்) எல்லைகளை நேற்று (25) முதல் மட்டுப்படுத்துவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, புதிய திருத்தத்தின்படி, நாட்டில் பதிவுசெய்து ஒரு வருடத்திற்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்படும் கடன் வசதி 60 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிநவீன வாகனங்கள் மற்றும் நாட்டில் பதிவுசெய்து ஒரு வருடத்திற்கும் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்படும் குத்தகை வசதியும் இன்று முதல் குறைக்கப்படும் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.



0 Comments