
நாட்டில் இம்முறை 2026 மே மாதம் 28 மற்றும் 30 ஆகிய திகதிகளில் எட்டவிருக்கும் ஹஜ் மற்றும் வெசாக் பண்டிகைகளை முன்னிட்டு, சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை அவர்களின் உறவினர்கள் பார்வையிடுவதற்கான விசேட வாய்ப்பை சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி, 2026.05.28 மற்றும் 30 ஆகிய இரு தினங்களிலும் சிறைக்கைதிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் இனிப்புப் பண்டங்களை, ஒரு கைதிக்கு போதுமான அளவில் மாத்திரம் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாகவும், சிறைச்சாலை சட்ட விதிகளுக்கு உட்பட்டும் கைதிகளைப் பார்வையிடுவதற்கான இந்த விசேட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



0 Comments