ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அபுதாபி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அணுமின் நிலையத்தின் உள் பாதுகாப்பு மண்டலத்திற்கு வெளியே இருந்த ஒரு ஜெனரேட்டரை ட்ரோன் தாக்கியதாக அபுதாபி ஊடக அலுவலகம் கூறியது.
இருப்பினும், இந்தத் தாக்குதல் நிலையத்தின் செயல்பாடுகளையோ அல்லது கதிர்வீச்சுப் பாதுகாப்பு அளவுகளையோ பாதிக்கவில்லை என்றும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்த அலுவலகம் மேலும் உறுதிப்படுத்தியது.
சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) இந்த நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறியது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தரப்பும் பொறுப்பேற்கவில்லை.
இருப்பினும், ஈரானுடனான தற்போதைய மோதலின் பின்னணியில், தனது எரிசக்தி மையங்களை ஈரான் குறிவைப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் முன்னதாகக் குற்றம் சாட்டியிருந்தது.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களால் தொடங்கிய இராணுவச் சூழலுக்குப் பிறகு, அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் உட்பட வளைகுடா நாடுகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான கடற்படை நடவடிக்கையை அறிவித்த பின்னர், ஐக்கிய அரபு அமீரகம் மீதான இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

0 Comments