நாட்டின் மீது பொருளாதார புயல் வீசிக்கொண்டிருக்கிறது. ஆனால், நமது பிரதமர் இத்தாலியில் மெலடி மிட்டாய் சாப்பிடுவதில் பிஸியாக இருக்கிறார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இத்தாலிக்கு சென்று தலைநகர் ரோம் நகரில் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் அங்கு மெலோனியுடனான சந்திப்பின்போது மெலடி மிட்டாயை கையில் வைத்திருந்தது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
“நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் பொருளாதார சுமையால் துயரத்தில் உள்ளனர். ஆனால், பிரதமர் மோடி சிரித்தபடி, ரீல்ஸ் உருவாக்கி பதிவிட்டு வருகிறார். பா.ஜ.க.வினர் அதற்கு கைதட்டுகின்றனர். நாட்டின் மீது பொருளாதார புயல் வீசிக்கொண்டிருக்கிறது. ஆனால், நமது பிரதமர் இத்தாலியில் மெலடி மிட்டாய் சாப்பிடுவதில் பிஸியாக இருக்கிறார்” என்றார்.

0 Comments