Trending

6/recent/ticker-posts

Live Radio

Update: துல் ஹிஜ்ஜா மாதத் தலைப்பிறை தென்படவில்லை: மே 28 இல் ஹஜ் பெருநாள்...!



ஹிஜ்ரி 1447ஆம் ஆண்டிற்கான புனித துல் ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை இன்று நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தென்படவில்லை என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மாலை கூடிய பிறைக்குழு மாநாட்டில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெறப்பட்ட பிறை சான்றுகளின் அடிப்படையில், துல் ஹிஜ்ஜா மாதத்திற்கான புதிய பிறை தென்பட்டதற்கான எவ்வித நம்பகமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என பிறைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி, தற்போதைய துல்கஃதா மாதம் 30 நாட்களாகப் பூர்த்தி செய்யப்பட்டு, அதற்கமைய எதிர்வரும் மே மாதம் 28 ஆம் திகதி வியாழக்கிழமை அன்று இலங்கை வாழ் முஸ்லிம்களால் புனித ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments