
அன்மையில் மறைந்த கபில சந்திரசேனவின் கையடக்கத் தொலைபேசியின் Lock நீக்குவதற்காக, சர்வதேச பொலிஸார் ஊடாக ஆப்பிள் (Apple) நிறுவனத்திற்கு அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
அவரது மரணம் குறித்த விசாரணை, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (26) மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பொலிஸார் இதனைத் தெரிவித்தனர்.
இரத்த மாதிரிகள் உள்ளிட்ட வழக்கு சான்றுப் பொருட்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் இங்கு குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கபில சந்திரசேனவின் சட்டத்தரணிகளான ரியன்சி அர்சகுலரத்ன மற்றும் உதர ஆகியோரை அடுத்த தவணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது, கபில சந்திரசேனவின் நண்பர் எனக் கூறப்படும் தனியார் துறை ஊழியர் ஒருவரும் சாட்சியமளித்துள்ளார்.



0 Comments