Trending

6/recent/ticker-posts

Live Radio

Update: மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சமீரா மெஹ்பூப்தீன் நாடு திரும்பினார்...!



காஸா மக்களுக்கான மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீதான இஸ்ரேலியப் படைகளின் தாக்குதலின் போது சிறைபிடிக்கப்பட்டிருந்த, இலங்கையின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சமீரா மெஹ்பூப்தீன் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளார்.

சர்வதேச கடல் பரப்பில் வைத்து இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்றையதினம் விசேட விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தார்.

நெருக்கடிகளுக்கு மத்தியிலும் காசா மக்களுக்காகக் குரல் கொடுத்து, மீண்டு வந்துள்ள சமீரா மெஹ்பூப்தீனை வரவேற்பதற்காகப் பல சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அங்கு வருகை தந்திருந்த 'பாலஸ்தீனத்தை விடுவிப்போம்' அமைப்பின் பிரதிநிதிகள், சமீரா மெஹ்பூப்தீனின் இந்தத் துணிச்சலான மனிதநேயப் பயணத்தைப் பாராட்டி, அவர் பாதுகாப்பாக தாயகம் திரும்பியமையைக் கொண்டாடும் வகையில் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

காசா பிராந்தியத்தில் நிலவும் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக சர்வதேச மனிதாபிமான உதவிக் கப்பல் குழுவுடன் இணைந்து பயணித்த போதே, இவர் இஸ்ரேலியப் படைகளால் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments