மத்திய கிழக்கில் கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இரு நாடுகளும் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இணையவழி மூலமாக கையெழுத்திட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோர் இந்த தொடக்கநிலை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கான உத்தியோகபூர்வ கையெழுத்து நிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்களும் அடுத்த 48 மணி நேரத்துக்குள் உலக நாடுகளுக்கு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் உச்ச தலைவரின் முழுமையான ஆதரவுடனேயே சபாநாயகர் காலிபாஃப் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

0 Comments