
வெனிசுவேலாவின் தலைநகரான காரகாஸ் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதன் பாதிப்புகள் கொலம்பியாவிலும் உணரப்பட்டுள்ளன.
மொன்டால்பன் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 7.1 ரிச்டர் அளவிலும், 13.2 கிலோமீட்டர் (8.2 மைல்கள்) ஆழத்திலும் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காரகாஸில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
காரகாஸில் உள்ள ஒரு வங்கி கட்டிடம் என நம்பப்படும் கட்டிடம் இடிபாடுகளுடன் காணப்படுகிறது.



0 Comments