Trending

6/recent/ticker-posts

Live Radio

சுற்றுலாத்துறையின் வருமானம் வீழ்ச்சி...!



இந்த ஆண்டில் ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 1,360 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது என மத்திய வாங்கி அறிவித்துள்ளது.

இதனடிப்படையில்,நடப்பாண்டில் முதல் ஐந்து மாதங்களில் சுற்றுலாத்துறையின் ஊடாக ஈட்டப்பட்ட வருமானமானது, கடந்த வருடத்தில் இதே காலப்பகுதியில் பெறப்பட்ட வருமானத்தை காட்டிலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இருப்பினும், 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் ஊடாக 1,543.1 மில்லியன் அமெரிக்க டொலர் பதிவாகியிருந்தது.

அதற்கமைய இந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் சுற்றுலா வருமானம் 11.9% இனால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனிடையே 2026, ஆம் ஆண்டு மே மாதத்தில் சுற்றுலா வருமானம் 155.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்படும் அதேவேளை, கடந்த ஆண்டின் மே மாதத்தில் அது 164.1 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியிருந்தது.

மேலும், ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பண அனுப்பலாக இலங்கைக்குக் கிடைத்த தொகை 3,909.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் வெளிநாட்டுப் பண வருமானம் 3,102.2 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்டது.

அதற்கமைய இந்த ஆண்டில் வெளிநாட்டுப் பணம் அனுப்பும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments