Trending

6/recent/ticker-posts

Live Radio

கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் 2 வாரங்களுக்கு மூடல்...!



டெங்கு நோய் பரவல் காரணமாக, கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் (University of the Visual and Performing Arts) இரண்டு வார காலத்திற்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதன்படி, பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள், பரீட்சைகள் மற்றும் விடுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.

டெங்கு பரவல் தொடர்பாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது அரச பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியுள்ளது.

கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் டெங்கு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதைத் தவிர, அங்கு வைரஸ் காய்ச்சல் நிலைமை ஒன்று பரவி வருகின்றமையும் இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

Post a Comment

0 Comments