
ஜேர்மனிதலைநகர் பெர்லினில் எல்.ஜி.பி.டி.க்யூ+ சமூகத்தினரின் நடைபவனி கூட்டத்திற்குள் வேனை மோதித் தாக்குதல் நடத்திய தீவிரவாதப் பின்னணி கொண்ட 21 வயதுடைய இளைஞன், பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை இரவு பூங்காவில் நடைபெற்ற இத்தொடர் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர்.
தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்பிலிருந்த ஜேர்மனியில் பிறந்த லெபனான் வம்சாவளியைச் சேர்ந்த இளைஞரே இத்தாக்குதலை நடத்தியவர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 24 மணிநேரத் தீவிரத் தேடுதலின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணியளவில் பெர்லினின் பகுதியில் சந்தேகநபர் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்ய முயன்ற பொலிஸாரை நோக்கி அவர் கூர்மையான ஆயுதத்தத்தால் தாக்க முயன்றதால், அதிகாரிகள் அவரைச் சுட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உளவாளி மற்றும் பொலிஸின் தீவிர கண்காணிப்பில் இருந்த இவர், தீவிரவாதச் செயல்களுக்கு முயன்றதற்காக ஏற்கனவே குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு முன்பே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத அமைப்பில் இணைய முயன்ற வரலாறும் இவருக்கு உள்ளதாக விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஜேர்மனி ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் இத்தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், "நமது சமூகத்தின் சுதந்திரம், திறந்த மனப்பான்மை மற்றும் தாராளமயமான கொள்கைகளை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம்" என உறுதியளித்துள்ளார்.
பிராண்டன்பர்க் கேட் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், 'வெறுப்பு கொல்லும்' என்ற பதாகைகளை ஏந்தியும் உயிரிழந்தவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களுக்கு முன் நடைபெற்றுள்ள இச்சம்பவம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்புக் கொள்கைகள் மீதான விவாதங்களை ஜேர்மனியில் மீண்டும் சூடுப்பிடித்துள்ளது.



0 Comments