Trending

6/recent/ticker-posts

Live Radio

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை...!



நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு , வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை , திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

Post a Comment

0 Comments