
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அபாயங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை மையத்தினால் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (ஜூலை 30) காலை 09:00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிக்கை, நாளை (ஜூலை 31) காலை 09:00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான மற்றும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
மறு அறிவித்தல் வரும் வரை கடற்படையினர் மற்றும் மீன்பிடி சமூகத்தினர் குறிப்பிட்ட கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்.
மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.
கடற்படை மற்றும் மீன்பிடி சமூகத்தினர் இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் அடுத்தடுத்த முன்னறிவிப்புகளை அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



0 Comments