Trending

6/recent/ticker-posts

Live Radio

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு 100 மில்லியன் டொலர் உதவி...!



உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனம், 2026 – 2031 காலகட்டத்தில் நாட்டிற்கு 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இணங்கியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கென இதில் 100 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.2026-02-09 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்பட்ட தீர்மானங்களுக்கமைய இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான உரிய கடன் வசதியைப் பெறுவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் உலக வங்கி குழுமத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன.

ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி திட்டமானது, பொருளாதார ஆற்றல் குழுக்களை வலுப்படுத்தவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கவும், பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்தவும், இணைப்பை விரிவுபடுத்தவும், நிலையான பிராந்திய அபிவிருத்தி மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், போட்டித்திறனை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments