Trending

6/recent/ticker-posts

Live Radio

‘மிஸ் டீன் இன்டர்நேஷனல் ’பட்டத்தை வென்றார் கியூபாவின் ஜோஹன்னா உராங்கா...!



இந்தியாவின், ஜெய்ப்பூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கியூபாவைச் சேர்ந்த ஜோஹன்னா உரங்கா, 'மிஸ் டீன் இன்டர்நேஷனல் (Miss Teen International 2026) பட்டத்தை தனதாக்கிக் கொண்டார்.

இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 2026ம் ஆண்டுக்கான மிஸ் டீன் இன்டர்நேஷனல் போட்டி நடைபெற்றது.

உலகெங்கிலும் உள்ள 13 முதல் 19 வயது வரையிலான இளம் பெண்களுக்காக நடத்தப்பட்ட இந்த புகழ்பெற்ற சர்வதேச அழகுப் போட்டியில் 30க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியில் கியூபாவைச் சேர்ந்த ஜோஹன்னா உராங்கா வெற்றி பெற்று ‘மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2026’ பட்டத்தை தனதாக்கிக் கொண்டார்.

அதேவேளை, நமீபியாவைச் சேர்ந்த சாண்டல் போரன் முதல் ரன்னரப்பாகவும், பராகுவேயைச் சேர்ந்த கியுலியானா ஒகாரிஸ் இரண்டாம் ரன்னரப்பாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரியா அல்மெஸ்டிகா மூன்றாம் ரன்னரப்பாக தெரிவு செய்யப்பட்டார்.

பட்டம் வென்ற கியூபா அழகி ஜோஹன்னா உராங்கா தனது வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில்,

“கனவு நனவானது”, “இந்தப் போட்டிக்காக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நான் தயாராகி வந்தேன். உண்மையைச் சொல்வதானால், எனது கடின உழைப்புக்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. இது எனது மிகப்பெரிய கனவுகளில் ஒன்றாகும். அந்தக் கனவு தற்போது நனவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments