Trending

6/recent/ticker-posts

Live Radio

பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து இலஞ்சம் வழங்க முயன்ற போதைப்பொருள் கடத்தல்காரர் கைது...!


ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விடுவிப்பதற்காக தெல்தெனிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 5 இலட்சம் ரூபாய் இலஞ்சம் வழங்க முயன்ற போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குள்ளேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

2,385 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் ஒருவர் 10,102 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்

இந்நிலையில், குறித்த சந்தேகநபர்களை விடுவிப்பதற்காக தெல்தெனிய பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்த நபர் ஒருவர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சமாக பணம் வழங்க முயன்றுள்ளார்.

இதன்போது, தெல்தெனிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான டி.எம். சந்திரபாலவினால் குறித்த நபர் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments