Trending

6/recent/ticker-posts

Live Radio

Update: டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு...!



ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை மொத்தம் 6,914 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது இந்த ஆண்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையை 92,254 ஆக உயர்த்தியுள்ளது.

புள்ளிவிவரங்களின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்களைக் கொண்டுள்ள மாவட்டமாக கம்பஹா மாவட்டம் பதிவாகியுள்ளது, அங்கு 19,671 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கொழும்பில் 18,289 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், களுத்துறையில் 5,964 பேரும், காலியில் 5,063 பேரும், இரத்தினபுரியில் 4,946 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் டெங்கு தொடர்பான 68 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments