
கொழும்பு காலி முகத்திடலில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற ‘கொழும்பு மரதன் 2026’ சர்வதேச போட்டியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் போட்டியாளர்கள் உட்பட 5,000க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்துகொண்டனர்.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்த இப்போட்டியில் 25 நாடுகளைச் சேர்ந்த 130க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு மொத்தமாக 12.83 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான (ரூ. 1.28 கோடி) பரிசுத் தொகை வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஆப்பிரிக்க நாடுகளான உகாண்டா, கென்யா, எத்தியோப்பியா மற்றும் இலங்கை வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று முதலிடங்களைக் கைப்பற்றினர்.
1. முழு மரதன் (42 கிலோமீற்றர்):
ஆண்கள் பிரிவு:
முதலிடம்: ஜூலியஸ் உகாண்டன் ஒச்சியெங் (உகாண்டா) – 2:18:54
இரண்டாமிடம்: ஜெஃப்ரி பிர்கன் (கென்யா) – 2:20:43
மூன்றாமிடம்: நெகாசி துஜி கோர்மே (எத்தியோப்பியா) – 2:21:50
பெண்கள் பிரிவு (எத்தியோப்பியா முழு ஆதிக்கம்):
முதலிடம்: அய்னாலெம் கசாஹுன் டெஃபெரி – 2:54:09
இரண்டாமிடம்: கெடே குடா கலாடோ – 2:54:48
மூன்றாமிடம்: கென்செப் ஷுமி ரெகாசா – 2:55:20
2. அரை மரதன் (21 கிலோமீற்றர்):
ஆண்கள் பிரிவு:
முதலிடம்: எட்வின் யெபேய் கிப்தூ (கென்யா) – 1:10:28
இரண்டாமிடம்: டபிள்யூ.எம்.எஸ். சரத்குமார (இலங்கை) – 1:10:52
மூன்றாமிடம்: போமர் கிப்தூ எவன்ஸ் (கென்யா) – 1:10:53
பெண்கள் பிரிவு:
முதலிடம்: மெத்மி ரொசாட்டா (இலங்கை) – 1:17:50
இரண்டாமிடம்: சாமினி (இலங்கை) – 1:26:14
மூன்றாமிடம்: ஜக்லின் ஜெப்தானுய் (கென்யா) – 1:26:41
3. 10 கிலோமீற்றர் ஓட்டப்பந்தயம் (இலங்கை வீரர்கள் முழு ஆதிக்கம்): 10 கி.மீ பந்தயத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பிரிவுகளிலுமே முதல் மூன்று இடங்களையும் இலங்கை வீரர்களே தட்டிச் சென்றனர்.
ஆண்கள் பிரிவு:
மகேந்திரன் கோபிநாதன் (32:16)
ஆர்.எம். சமந்த புஷ்பகுமார (33:04)
டி.பி.எஸ்.எஸ். சேனாநாயக்க (33:06)
பெண்கள் பிரிவு:
பி.ஜி.எஸ்.எஸ். விமலசூரிய (39:08)
ஒஷாதினி ஃபொன்சேகா (39:27)
கே.எம். சஷிகலா (42:17)



0 Comments