Trending

6/recent/ticker-posts

Live Radio

சில பகுதிகளுக்கு 50 மி.மீ மழைவீழ்ச்சி...!



ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

இதேவேளை சூரியனின் தென் திசை நோக்கிய நகர்வு காரணமாக இன்றைய தினமும் இலங்கையை அண்மித்த அட்சரேகைகளுக்கு நேர் மேலே சூரியன் பயணிக்கும் இதனால் இன்று நண்பகல் 12.08 மணியளவில் காலி, அங்குலான, இமதுவ, தெலிஜ்ஜவில, யட்டியன மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளுக்கு சூரியன் உச்சம் கொடுக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments