
நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 74 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை, செப்டெம்பர் மாதத்தின் முதல் 13 நாட்களில் மட்டும் 2,146 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவாக இதுவரை 20,742 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக கொழும்பு மாவட்டத்தில் 19,235 நோயாளர்களும், கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முறையே 7,291 மற்றும் 6,247 நோயாளர்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 Comments