கொட்டகலை பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்ட கடந்த கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஊழல் மோசடிகள் இடம்பற்றிருப்பதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டதையடுத்து, அவை தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் மூலம், சபையின் எல்லைப் பகுதிகளுக்குட்பட்ட பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாகவும் சில ஒப்பந்தக்காரர்கள் இதில் தொடர்புபட்டிருப்பதாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிலரை ஆரம்பக்கட்ட விசாரணைக்கு அழைத்துள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவானது அவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
சில திட்டங்களில் ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்வதிலும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒரு பாதை அபிவிருத்தி தொடர்பிலும் ஊழல்கள் இடம்பெற்றிருக்கின்றமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அது தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுக்க இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments