Trending

6/recent/ticker-posts

Live Radio

ஜனாதிபதி தலைமையில் இன்று முதல் மக்கள் பேரணிகள் ஆரம்பம்...!



எங்கள் ஆட்சிக்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்குச் சுபிட்சம்’ என்ற கருப்பொருளின் கீழ், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள மக்கள் பேரணிகளின் தொடரில் முதல் இரண்டு பேரணிகள் இன்று (06) புலத்சிங்ஹல மற்றும் பேருவளை பொது விளையாட்டு மைதானங்களில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இப்பேரணித் தொடர் ஒரு மாவட்டத்திற்கு இரண்டு பிரதான பேரணிகள் வீதம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு பேரணியும் ஜனாதிபதியின் தலைமையிலேயே நடைபெறவுள்ளது.

இதற்கமைய, வரும் 12 ஆம் திகதி பொலன்னறுவையிலும், 13 ஆம் திகதி அனுராதபுரத்திலும், 20 ஆம் திகதி மாத்தறையிலும், 27 ஆம் திகதி கம்பஹாவிலும் மக்கள் பேரணிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments