
இலங்கை பாராளுமன்றம் இன்று (08) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.
காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளைகள் 22(1) முதல் 22(6) வரை குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற நடவடிக்கைகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைகளை எதிர்பார்க்கும் கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை, 203ஆம் அத்தியாயமான மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 2489/22 மற்றும் 2493/19 இலக்கங்களைக் கொண்ட அதிவிசேட வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட இரண்டு கட்டளைகளுக்கான அங்கீகாரத்தைப் பெறுவது தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை தொடர்பில் விவாதம் நடத்தப்படவுள்ளது.



0 Comments