Trending

6/recent/ticker-posts

Live Radio

துமிந்த திஸாநாயக்கவுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்...!



தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் பெண் ஒருவருக்கு எதிராக இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இரு குற்றவாளிகளுக்கும் முறைப்படி குற்றப்பத்திரிகைகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக வழக்கு விசாரணைகள் தொடர்ந்து கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளன.

Post a Comment

0 Comments