
தொல்பொருட்களைத் தேடி சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து சந்தேக நபர்களை ஹிங்குரகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தல்பொத்த பகுதியில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 19, 26, 45, 47 மற்றும் 49 வயதுடைய பொலன்னறுவை மற்றும் புலஸ்திகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஹிங்குரகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



0 Comments