
உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, இன்று (3) நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகள் மற்றும் மதுவிற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என இலங்கை மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ஒக்டோபர் 3ஆம் திகதி சர்வதேச மதுவிலக்கு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மதுபானப் பாவனையால் சமூகத்தில் ஏற்படும் தீமை விளைவிக்கும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மதுப் பாவனையைக் கட்டுப்படுத்துதல் அல்லது முற்றாகத் தவிர்ப்பதை ஊக்குவிப்பதும் இத்தினத்தின் பிரதான நோக்கங்களாகும்.
இதற்கமைய, இன்றைய தினம் மதுபான விற்பனை நிலையங்கள் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.



0 Comments