Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

ராவல்பிண்டி டெஸ்ட்டில் 146 வருடங்களில் இல்லாத புதிய சாதனை...!

இங்கிலாந்துடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் 3 வீரர்கள்இன்று சதம் குவித்தனர்.

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் நடைபெறும் இப்போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 657 ஓட்டங்களைக் குவித்திருந்தது

அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஸாக் கிராவ்லி (122), பென் டக்கெட் (107) ஆகியோருடன் ஒலீ போப் (108), ஹரி புரூக் (153) ஆகியோரும் சதம் குவித்திருந்தனர்.

போட்டியின் 3 ஆவது நாளான இன்று , பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான அப்துல்லா ஷபீக் 114 ஓட்டங்களையும், இமாம் உல் ஹக் 121 ஓட்டங்களையும் குவித்தனர். தமது 3ஆவது சதங்களைப் பதிவு இவ்விருவரும் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 225 ஓட்டங்களைக் குவித்தனர்.

146 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், போட்டியொன்றின் இரு அணிகளின் 4 ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களும் முதல் இன்னிங்ஸ்களில் சதம் குவித்தமை இதுவே முதல் தடவையாகும்.

அணித் தலைவர் பாபர் அஸாம் 136 ஓட்டங்களைக் குவித்தார்.. இது இந்த இன்னிங்ஸின் 3 ஆவது சதம் என்பதுடன் பாபரின் 8 ஆவது டெஸ்ட் சதமாகும்.

இன்றைய ஆட்டமுடிவின்போது இடைவேளையின்போது பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 499 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

தற்போது இங்கிலாந்து 158 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

Post a Comment

0 Comments