தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (18) நடாத்தப்படுவதே இந்த தீர்மானத்திற்கு காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (18) நடாத்தப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு 34,698 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
பரீட்சைக்கு முன்னர் மாணவர்களை வற்புறுத்த வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
2022 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் வழங்கப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் முன்னர் தெரிவித்திருந்தது. அதற்கு பதிலாக தேர்வெழுதும் விண்ணப்பதாரர்களுக்கு வருகைப்பதிவு முறை பயன்படுத்தப்படும்.
இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களை வழங்கும் முறையிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டாவது வினாத்தாள் முதலில் வழங்கப்படும், அதைத் தொடர்ந்து முதல் வினாத்தாள் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு கால அட்டவணை முறையின் விரிவான ஆய்வுக்குப் பிறகு வினாத்தாள் வழங்கும் முறை திருத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த புதிய முறை இன்று அமலுக்கு வருகிறது.
அதன்படி, இரண்டாவது தாள் ஒரு மணி நேரம் 15 நிமிடங்களும், இரண்டாவது தாள் ஒரு மணி நேரமும் இருக்கும்.
0 Comments