Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

தெலங்கானா: நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு – தூங்கிக் கொண்டிருந்த 6 பேர் பலி…!!


தெலங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் வீடு தீப்பற்றி எரிந்த விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மஞ்ரியலா மாவட்டம் ராமகிருஷ்ணபுரம் கிராமத்தில் சிவையா - பத்மபதியா தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில், இவர்களது வீட்டிற்கு 2 உறவினர்கள் தங்களது 2 குழந்தைகளுடன் வந்திருந்தனர். இதையடுத்து 6 பேரும் நேற்றிரவு சாப்பிட்ட பின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.



இதையடுத்து நள்ளிரவை தாண்டிய பின் அந்த வீடு திடீரென தீப்பற்றி எறியத் தொடங்கியது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவர்களை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் வீடு முழுவதுமாக எரிந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த 6 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மஞ்சிரியாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இதைத் தொடர்ந்து 6 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கதவை தாழிட்டு வீட்டிற்கு தீ வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த தீ விபத்தில் சிவையா (50), பத்மா (45), மௌனிகா (35), ஹீம பிந்து (2), ஸ்வீட்டி (4), சந்தையா (40) ஆகிய 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Post a Comment

0 Comments