Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

அல்சைமர் நோய்க்கான மருந்தில் முன்னேற்றம்...!


அல்சைமர் நோயினால் மூளையில் ஏற்படும் அழிவை மெதுவாக்கும் முதல் மருந்தின் சோதனையில் சாதகமான முடிவு கிடைத்துள்ளது. பல தசாப்தங்கள் நீடித்த தோல்விக்குப் பின்னரே இந்த மருந்தை கண்டுபிடிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்.

எனினும் இந்த மருந்தில் சில பாதகமான நிகழ்வுகள் பதிவாகி இருக்கும் நிலையில் அதன் பாதுகாப்பு பற்றியும் தொடர்ந்து கவலை உள்ளது.

லெகானமாப் என்ற அந்த மருந்தை மருந்து தயாரிப்பு நிறுவனங்களான இஸ்சய் மற்றும் பயோஜின் என்ற நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இந்த மருந்தின் 3ஆம் கட்ட சோதனை முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதில் அல்சைமர் பாதிக்கப்பட்டோரிடம் ஏற்படும் அறிவாற்றல் மற்றும் செயல்பாட்டு சரிவை லெகானமாப் மருந்து 27 வீதம் குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் உருவாகும் நச்சுத்தன்மை வாய்ந்த பீட்டா – அமிலாய்டு புரதங்களின் திட்டுகளை நீக்கும் வகையில் லெகானமாப் மருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments