Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கையில் இனிமேல் பாலியல் துன்புறுத்தல் குற்றவியல் தண்டனை !



அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் சேர்க்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


மேலும், பாலியல் லஞ்சம் கொடுப்பதை குற்றமாக கருதி, அதற்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக புதிய சரத்தை அறிமுகப்படுத்தி, குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிக்க, சட்ட வரைவாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

Post a Comment

0 Comments