Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

துணிவு பட டிரைலர் 3 கோடி பார்வையாளர்களை கடந்தது…!


இப்படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 3 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

'துணிவு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 3 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

Post a Comment

0 Comments