Trending

6/recent/ticker-posts

திருநங்கைக்கு முதல் முறை மரண தண்டனை…!


அமெரிக்காவில் முதல்முறை திருநங்கை ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டின் கொலை ஒன்றுக்காக மிசூரியில் 49 வயது ஆம்பர் மக்லோப்லின் என்பவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மக்லொப்லின் தனது முன்னாள் காதலியை கொன்று உடலை மிசிசிப்பி ஆற்றில் விசியதாக குற்றங்காணப்பட்டவராவார். அவருக்கு பொது மன்னிப்பு வழங்குவதை ஆளுநர் மைக் பார்சன் நிராகரித்ததை அடுத்தே மரண தண்டனை முன்னெடுக்கப்பட்டது.

ஆன்மீக ஆலோசர் ஒருவருடன் பேசிய பின் மக்லோப்லினுக்கு விச ஊசி செலுத்தப்பட்டது. சில நிமிடங்களின் பின் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

1970களில் மரண தண்டனை மீண்டும் அமுலுக்கு வந்தது தொடக்கம் இதுவரை 1,558 பேர் மரண தண்டனைக்கு உள்ளாகி இருப்பதோடு அதில் 17 பேர் தவிர அனைவரும் ஆண்கள் என்று தரவுகள் குறிப்பிடுகின்றன.

Post a Comment

0 Comments