Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

சிக்கன நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு…!


நாடு நிதி நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளதைக் கருத்தில் கொண்டு சிக்கன நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இதன் நிமித்தம் பல்வேறு கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய அறிவித்தலை பாகிஸ்தான் அமைச்சரவை செயலகம் விடுத்துள்ளது. அந்த அறிவித்தலில் அரசாங்க வாகனங்களுக்கான எரிபொருள் மானியக் குறைப்பு, உத்தியோகபூர்வ பயணங்களுக்கு கட்டுப்பாடு, கொடுப்பனவுகள் நீக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பாகிஸ்தான் அமைச்சரவை செயலகம் விடுத்துள்ள அறிக்கையில், பிரதமரின் ஆரம்ப அங்கீகாரம் மற்றும் நாட்டின் நிதிப் பற்றாக்குறை நிலை உள்ளிட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிதி நெருக்கடி சீரடையும் வரையும் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படலாகாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments