பிரான்ஸின் தலைநகர் பாரிசைச் சேந்த சிறுமி ஒருவர் வீதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை 10 மணி அளவில் பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள Mont-Cenis பேருந்து தரிப்பிடத்துக்கு அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறுமி ஒருவரை ஐவர் கொண்ட குழு சுற்றி வளைத்துள்ளது. அவர்கள் சிறுமியை தாக்கி, அவரிடம் இருந்த தொலைபேசியை பறித்துள்ளனர்.
பின்னர் ஐவரில் ஒருவர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடியதும், அங்கு வந்த பேருந்து ஒன்றில் சிறுமி ஏறியுள்ளார்.
சிறுமியின் நிலையை பார்த்த பேருந்து சாரதி, உடனடியாக பொலிஸார் அழைத்துள்ளார்.
இதன்போது விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments