Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

எதிர்வரும் நாட்களில் கிழக்கு, ஊவா வரட்சி காலநிலையில் மாற்றம்...!


எதிர்வரும் நாட்களில் நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களில் வரட்சியான காலநிலையில் மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றையதினம் (20) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் வட மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு... 
STAR 'செய்திகள்'

Post a Comment

0 Comments