Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

Online இல் சேவை வழங்க ஸ்டூடியோக்களுக்கு அனுமதி..!


தேசிய அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகளுக்கான புகைப்படங்கள் நாடு முழுவதுமுள்ள ஸ்டூடியோக்கள் மூலம் Aikavo தொழில்நுட்பத்தினூடாக ஒன்லைனில் வெற்றிகரமாக வழங்கப்படுகின்றன. 

சாரதி அனுமதிப் பத்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் புகைப்படங்களுக்கும், வாகனப் பதிவு மற்றும் மாற்றத்துக்குப் பயன்படுத்தப்படும் புகைப்படங்களுக்கும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அகில இலங்கை நிபுணத்துவ புகைப்பட நிலைய உரிமையாளர்கள் சங்கத்தில் சுமார் 7,000 உறுப்பினர்களுக்கு புகைப்பட நிலையங்கள் உள்ளதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த புகைப்படச் சேவைகளை வினைத்திறனுடன் வழங்குவதற்கான வசதிகள் உள்ளதாகவும் சங்கத்தின் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அனைத்து இலங்கை நிபுணத்துவ புகைப்படச் சேவைகள் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தேவையான Aikavo மென்பொருள் அமைப்பை நிறுவுவதற்கான செலவை ஏற்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. அதன் பராமரிப்புக்காக வருடாந்தம் உரிமக் கட்டணத்தையும் செலுத்த அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அகில இலங்கை புகைப்படச் சேவை உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments