
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை விடுவிக்கக் கோரி, போராட்டமொன்றினை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நேற்று (20) இம்ரான்கானின் சகோதரி அலீமா கான் லாகூரில் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இம்ரான்கானை விடுவிக்குமாறு அலீமா கான் தொடர்ந்து போராடி வருவதோடு, பல தரப்புகளிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி இம்ரான்கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையிலேயே இம்ரான்கானின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் அவரை 30 நாட்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



0 Comments