Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

பாரிய பூகம்பம்: துருக்கியில் 100 பேர், சிரியாவில் 111 பேர் பலி…!



துருக்கியில் இன்று ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், அயல் நாடான சிரியாவில் குறைந்தபட்சம் 111 பேர் உயிரிழந்துள்ளனர். 


துருக்கியில் சிரியாவின் எல்லை அருகில் 7.8 ரிக்டர் மற்றும் 6.7 ரிக்டர் உட்பட 4.7 ரிக்டர்களுக்கு மேற்பட்ட 10 பூகம்பங்கள் இன்று ஏற்பட்டன.

துருக்கி பூகம்பத்தின் அதிர்வுகள் சைப்பிரஸ் தீவு மற்றும் எகிப்திலும் உணரப்பட்டன.

துருக்கியில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் கட்டடங்கள் உடைந்தன.

இப்பூகம்பத்தினால் துருக்கியில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளை, சிரியாவின் அரச கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் குறைந்தபட்சம் 111 பேர் உயிரிழந்துள்ளதுடன் 516 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments