டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் ரூபாவின் பெறுமதி உயர்வினால் ஒரு கிலோ தேயிலைக்கான பெறுமதி 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலக சந்தையில் ஒரு கிலோ மலையக தேயிலை 1,250 ரூபாவிற்கு கிடைத்ததாகவும், தற்போது அது 1,050 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
டொலரின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்தால் தேயிலையின் விலை மேலும் வீழ்ச்சியடையும் எனவும், இதனால் தேயிலை கைத்தொழில் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்கட்டண அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கு அதிக செலவை சுமக்க வேண்டியுள்ள நிலையில், ஒரு கிலோ தேயிலைக்கு பெறப்படும் தொகை குறைவடைந்துள்ளமையினால் தேயிலை கைத்தொழில் கடும் ஆபத்தில் உள்ளதாக தோட்ட அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
0 Comments