உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் இலங்கை அரசாங்கம் சுதந்திரமான நியாயமான தேர்தலை உடனடியாக நடத்துமாறு அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார உறவுகளிற்கான குழு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
டுவிட்டர் செய்தியொன்றில் அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
இலங்கை மக்களின் குரல்கள் ஒலிக்காமலிருப்பதற்காக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் ஜனநாயகத்திற்கு விரோதமானது இலங்கையர்களின் உரிமைகளை நேரடியாக மீறும் செயல் என அமெரிக்க செனெட் குழு தெரிவித்துள்ளது.
நன்றி...
Daily-Ceylon
0 Comments