Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஸ்கொட்லாந்தின் முதலமைச்சராக ஹம்ஸா யூசுப் தெரிவானார்...!


ஸ்கொட்லாந்தின் முதல் அமைச்சராக ஹம்ஸா யூசுப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்கொட்லாந்தின் ஆளும் ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியின் (எஸ்என்பி) தலைவர் பதவிக்கான தேர்தலில் ஹம்ஸா யூசுப் வெற்றிபெற்றார். இதன் மூலம் ஸ்கொட்லாந்தின் முதலமைச்சராகவும் தெரிவாகியுள்ளார்.

37 வயதான ஹம்ஸா யூசுப், பாகிஸ்தானிலிருந்து பிரிட்டனில் குடியேறிய குடும்பமொன்றில் பிறந்தவர்.

ஸ்கொட்லாந்தின் முதல் அமைச்சராக தெரிவான முதல் முஸ்லிம் ஹம்ஸா யூசுப் ஆவார்.

அத்துடன், பிரிட்டனில் பிரதான கட்சியொன்றின் தலைவராக தெரிவான முதல் முஸ்லிமும் இவராவார்.

Post a Comment

0 Comments